முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.வி. நிகழ்ச்சியாகும் உக்ரைன் போர்: அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த டிஸ்கவரி சேனல் பியர் கிரில்ஸ்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      உலகம்
Jelensky 2022-12-02

தாக்குதலுக்கு உள்ளாகும் உக்ரைன் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள அதிபர் ஜெலன்ஸ்கியை பிரிட்டனின் பிரபல தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் பியர் கிரில்ஸ் நேரில் சந்தித்துப் பேசினார். 

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இருக்கும் படங்களை பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார்.   அதில் பியர் கிரில்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது,  இந்த வாரம் உக்ரைன் தலைநகருக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அனுபவம் என்னைப் போன்ற வேறு யாருக்கும் கிடைக்காது. உக்ரைன் நாடு குளிரில் தவிக்கிறது. அடிப்படை கட்டமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. 

லட்சக்கணக்கான மக்கள் வாழ்வதற்காக போராடி வருவது அன்றாடம் நடந்து வரும் ஓர் உண்மையான போராட்டம். இந்த சிறப்பு நிகழ்ச்சி மூலம் இந்த உலகம் பார்க்காத அதிபர் ஜெலன்ஸ்கியின் இன்னொரு பக்கம் புலப்படும். நான் என்ன அறிய வேண்டும் என்றால், எப்படி நாட்டை காக்கிறீர்கள். எனக்கு பதில்களாக நிறைய கிடைத்தன. இந்த நிகழ்ச்சி விரைவில் வெளியாகவுள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் எங்களை அரவணைத்து நேரம் ஒதுக்கியமைக்கு அதிபர் ஜெலன்ஸ்கிக்கு நன்றி. உறுதியுடன் இருங்கள் என்று நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.   

இந்த பதிவுக்கு உலகம் முழுக்கவுள்ள பியர் கிரில்ஸ் ரசிகர்கள் பகிர்ந்து தனது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளாகும் உக்ரைன் நாடு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றும், உக்ரைன் அதிபர் எடுக்கும் முயற்சிகள், மக்கள் அனுபவிக்கும் சிரமங்கள், உள்ளிட்டவை குறித்து வெளி உலகத்திற்கு தெரிவிக்க இந்த நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என்றும் பலர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து