முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6-ம் வகுப்பு புத்தகத்தில் இருந்து ரம்மி விளையாட்டு பாடப்பகுதி நீக்கம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
School-Education 2022 02 11

6-ம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில் இருந்து ரம்மி விளையாட்டு பாடப்பகுதி நீக்கம் செய்யப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விளையாட்டினால் பலர் உயிர் இழந்துள்ள நிலையில் சட்ட மசோதாவுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் தர வேண்டும் என கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் பாடத்திட்டத்தில் இருந்து ரம்மி விளையாட்டு பகுதி நீக்கம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 6-ம் வகுப்பு கணித பாடப் புத்தகத்தில் ரம்மி விளையாட்டு குறித்து பாடப்பகுதி உள்ளது. அதனை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் சர்ச்சைக்குரிய ரம்மி விளையாட்டு பாடப்பகுதி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து முழுமையாக நீக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ரம்மி விளையாட்டு பாடப்பகுதி இந்த கல்வி ஆண்டில்தான் சேர்க்கப்பட்டு இருந்தது. ஆன்லைன் விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில் பாடப்புத்தகத்தில் இடம் பெறுவது முறையாக இருக்காது எனக் கருதி இந்த நடவடிக்கையை கல்வித்துறை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து