முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழ் இடம் பெறும்: மத்திய சட்டத்துறை அமைச்சர் பேச்சு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
Kiran-Rijju 2022-12-02

சென்னை ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழ் விரைவில் இடம் பெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார். 

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின்12-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பேசியதாவது, 

(பொதுமக்கள்) நீதித்துறையை எளிதாக அணுகுவதற்கு, பிராந்திய மொழிகளில் நீதிமன்ற நடவடிக்கைகள் இருப்பது காலத்தின் கட்டாயம். நமது பிரதமர் நமது கலாச்சாரம் மற்றும் நமது மொழியுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.  நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறையில் எதிர்காலத்தில் பிராந்திய மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் மற்றும் அனைத்து ஐகோர்ட் தலைமை நீதிபதிகளிடமும் ஏற்கனவே நான் பேசியுள்ளேன். ஐகோர்ட் மற்றும் அனைத்து மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் (எதிர்காலத்தில்) தமிழ் மொழி முக்கிய இடம் பெறுவதைக் கண்டு நாம் அனைவரும் பெருமைப்படுவோம். தமிழ் மிகச் சிறந்த மொழி, ஒரு மொழியை மட்டும் திணிப்பதை நான் எதிர்க்கிறேன். உள்ளூர் மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து