முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் விரைவில் புதிய வசதி அறிமுகம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
Metro-Rail 2022-11-27

வாட்ஸ் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. 

சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயிலில் பயணிக்க நேரடியாக பயணச்சீட்டு பெறுவது, பயண அட்டை முறை, கியூ.ஆர். கோடு என மூன்று முறைகள் உள்ளன.   இதன் தொடர்ச்சியாக வாட்ஸ் ஆப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணிக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொதுவான கைபேசி எண் பயணிகளுக்கு வழங்கப்படும். இந்த எண்ணுக்கு ஹாய் என வாட்ஸ் ஆப் செய்தால் சாட் போர்டு திறக்கும்.  பயணியின் பெயர், புறப்படும் மெட்ரோ ரயில் நிலையம், சேர வேண்டிய இடம் உள்ளிட்டவற்றை அதில் பதிவு செய்து பின்னர் வாட்ஸ் ஆப், GPay, paytm, மூலம் டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும். பின்னர் பயணிகளுக்கு பயணச்சீட்டு வாட்ஸ் ஆப்-ல் அனுப்பப்படும். அதனை ரயில் நிலையத்தில் முன்னுள்ள டிக்கெட் ஸ்கேனரில் காண்பித்து  பயணம் மேற்கொள்ளலாம். இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து