முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழைக்கால விபத்துக்களை தடுக்க மின் இணைப்பு உள்ளவர்கள் கட்டாயம் ஆர்.சி.டி. கருவியை பொருத்த வேண்டும்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
Power 2022 10 13

மின் இணைப்பு உள்ளவர்கள் ஆர்.சி.டி.( Residual Current Device) கருவியை பொருத்துவது கட்டாயம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

வீடு, கடை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் மின் நுகர்வோர்கள் ஆர்.சி.டி. கருவி பொருத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மின்கசிவினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளை தடுக்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஆர்.சி.டி எனப்படும், உயிர்காக்கும் சாதனத்தை மின் இணைப்பில் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மேலும் மழைக் காலங்களில் ஏற்படும் விபத்துகளை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள மின்சார வாரியம், ஆயிரங்கள் செலவில் ஆர்.சி.டியை நிறுவுவதன் மூலம் விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளது. வீடு, கடை, தொழில், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் அனைத்து வகையான மின் நுகர்வோர்களும் இதை பொருத்த வேண்டும் என்றும்,உயிர் பாதுகாப்பின் அடிப்படைத் தேவையான ஆர்.சி.டி சாதனத்தை அவரவர் மின்னிணைப்பில் பொருத்தி விபத்தை தவிர்க்குமாறும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து