முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடநாடு வழக்கு விசாரணை ஜன.27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
Kodanadu 2022-10-28

கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணை ஜனவரி மாதம் 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள், சி.பி.சி.ஐ.டி. புலனாய்வு அதிகாரிகள் மற்றும் இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். 

விசாரணையில் அரசு தரப்பு தனிப்படை போலீசார், இதுவரை நடத்திய விசாரணையின் அடிப்படையில் 320 சாட்சியங்களிடம் மேலும் கூடுதலாக விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. அனுமதி கோரப்பட்டது. அரசு தரப்பு மூலம் சாட்சிகள் மற்றும் 720 தொலைபேசி உரையாடல் பதிவுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த கூடுதல் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜனவரி 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து