முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2022      தமிழகம்
iaiyanpu 2022 09 24

Source: provided

சென்னை : தமிழகத்தில் 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அபூர்வா, ஹிதேஸ்குமார் மக்வானா, அதுல்யா, எஸ்.ஜே.சிரு, ஆபிரகாம், சரவண வேல்ராஜ், ஜான் லூயிஸ், செல்வராஜ், லில்லி, நந்தகோபால், கிரண் குராலா, பழனிசாமி உள்ளிட்ட 16 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி இளைஞர் நலன், விளையாட்டு வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா நியமனம்

வீடு, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக அபூர்வா,  டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டாளர் கிரண் குரலா பேரூராட்சிகள் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும்  உயர்க்கல்வித்துறை கூடுதல் செயலாளராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த ஹிதேஷ்குமார் மக்வானா, டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநர் எஸ்.ஜே.சிரு, சமூக நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் டி.ஆபிரகாம், சமூக சீர்திருத்த துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இ.சரவணவேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

நகர் ஊரமைப்பு இயக்கக திட்ட இயக்குனராக வி.கணேசனும்,  தொழில்துறை சிறப்பு மேலாளர் ஆர்.லில்லி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சிறப்பு செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  பேரூராட்சிகள் இயக்குனராக இருந்து வரும் டாக்டர் ஆர்.செல்வராஜ் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தமிழ்நாடு பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறையின் ஆணையாளராக ஆர்.நந்தகோபால்,  வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ஜான் லூயிஸ் அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராகவும்,  சேலம் சாகோசெர்வ் மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.என்.பூங்கொடியும்,  பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார நல இயக்குனராக அனில் மேஷ்ராம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து