முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா -வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: மீண்டும் வர்ணனைக்கு திரும்பிய ரிக்கி பாண்டிங்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      விளையாட்டு
Ricky 2022-12-03

Source: provided

பெர்த் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கு இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. 

இந்த போட்டியில் கிரிக்கெட் வர்ணனையை ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பாவன் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் டெஸ்ட் போட்டி வர்ணனையின்போது பேசிக்கொண்டிருந்த ரிக்கி பாண்டிங்குக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. 

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிக்கி பாண்டிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலையில் ரிக்கி பாண்டிங் நேற்று மீண்டும் வர்ணனைக்கு திரும்பி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், என்னுடையை சிறுவயது நண்பன் ஜேஎல் என்னை நன்றாக கவனித்துகொண்டார்.

நான் இன்று காலை மிகவும் பளபளப்பாகவும், புதியதாகவும் இருக்கிறேன். நேற்றைய சிறந்த பகுதியை தவறவிட்ட பின்னர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்று நல்ல நாளுக்கு தயாராகிவிட்டேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து