முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
Vaithlingam 2022 12 04

Source: provided

சென்னை ; அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் என்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியதாவது, 

அம்மா கூறியது போல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். அ.தி.மு.க. நூறாண்டு காலம் ஆட்சியில் இருக்கும். அதனை நோக்கி பயணிக்கிறோம். எங்கள் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் கூறிய கருத்து ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கில் அனைவருக்கு தாழ்வு என்ற கருத்துதான்.  அவரது கருத்தை லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆதரிக்கிறார்கள். 

பதவியில் இருப்பவர்கள் எதிர்க்கிறார்கள். தொடர்ந்து எதிர்த்தால், எடப்பாடி பழனிசாமியை ஒதுக்கி விட்டு நாங்கள் ஒன்றுசேர்வோம். அனைவரும் ஒன்றுசேர்வது தான் எங்களுடைய விருப்பம். அதாவது எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், சின்னம்மா, தனிக்கட்சி வைத்துள்ள சண்முகம், ஓ.பி.எஸ் ஆகிய அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 

ஒற்றுமைக்கு ஒத்துவரவில்லை என்றால் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது தான் உண்மை. அது விரைவில் நடைபெறும். தி.மு.க. எங்களை ஆட்கொள்ளவில்லை. அதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாடோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் கூட்டணியில் இருப்போம். எங்கள் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து