முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு திருமணம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
CM-1 2022 12 04

Source: provided

சென்னை ; சென்னை, திருவான்மியூர், அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களையும் வழங்கி வாழ்த்தினார். 

2022-2023ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவீனத்தைத் திருக்கோயில்களே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று  திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். புதுமண ஜோடிகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செஞ்சி கே.எஸ். மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், சென்னை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து