முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து அறநிலையத்துறை சார்பில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 217 ஜோடிகளுக்கு திருமணம்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      தமிழகம்
CM-2 2022 12 04

Source: provided

சென்னை : இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று 217 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சென்னையில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.

கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள 20 மண்டலங்களில் 217 ஜோடிகளுக்கு முதற்கட்டமாக நேற்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

2022-2023ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவீனத்தைத் திருக்கோயில்களே ஏற்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திருக்கோயில்கள் சார்பில் 31 ஜோடிகளுக்கு நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று  திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். புதுமண ஜோடிகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

பின்னர் மணமக்களை வாழ்த்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

இந்து அறநிலையத்துறை சார்பில் இன்று ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடிய 31 இணையர்களுக்கு, மணவிழா நிகழ்ச்சியை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்போடு, கட்டுப்பாட்டோடு, எழுச்சியோடு இங்கே நடந்திருக்கிறது. இந்த 31 பேர் மட்டுமல்ல, இன்றைக்கு (நேற்று) 217 இணையர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறையின் சார்பில் மணவிழா நிகழ்ச்சி நடந்துள்ளது. மணமக்களுக்கு ஒரு தந்தையாக என்னுடைய வாழ்த்துகள்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து