முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் கடைகள் மூலம் பொங்கல் ரொக்கப்பணம் ரூ.1000 கொடுக்க ஏற்பாடு

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      தமிழகம்
Rupees 2021 12-05

Source: provided

சென்னை : வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரொக்கப் பணம் ரூ.1000 ரேசன் கடையில் கொடுக்க தமிழக அரசு தீவர ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசியுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா? என்றும் ஆலோசிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் ரேஷன் கடைகளில் ரொக்கப் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகும் ரேசன் கடைகளில் அரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த பொருட்களின் தரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. பல ரேசன் கடைகளில் ஒழுகிய வெல்லம் வழங்கப்பட்டதால் எதிர்க்கட்சியினர் அரசு மீது குறை கூறினார்கள். மற்ற பொருட்களின் எடையும் குறைவாக இருந்ததாக விமர்சனம் வைக்கப்பட்டது. இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசியுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா? என்றும் ஆலோசிக்கப்படுகிறது.

பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை கருத்து தெரிவித்து இருந்தது. ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 கார்டுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தது. இதை பூர்த்தி செய்தால் தான் வங்கிக்கணக்கு மூலம் பணம் போட முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

இதனால்தான் கூட்டுறவு துறை வெளியிட்ட அறிவிப்பில் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால் அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. ஆனாலும் இன்னும் அந்தப் பணி முழுமையாக முடிவடையவில்லை. இந்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை கொடுப்பதின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் அதை அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு இடம் பெற வாய்ப்பில்லை என தெரிகிறது. ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசின் சார்பில் இன்னும் வெளியாகவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு செய்து விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து