முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்மட்டம் உயர்வு: 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      தமிழகம்
Mettur-Dam 2022 12 04

நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 3-வது நாளாக நேற்று முன்தினம் 9,500 கன அடியாக நீடித்தது. அதேசமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 10,962 கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று சற்று குறைந்து 9,566 அடியாக வந்து கொண்டு இருந்தது. 

இந்நிலையில், காவிரி டெல்டா பாசன பகுதியில் மழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் மாலை முதல் நீர்திறப்பு 2 ஆயிரம் கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. 

நேற்று முன்தினம் 119.05 அடியாக நீர்மட்டம் சற்று உயர்ந்து நேற்று காலை 119.32 அடியாக உயர்ந்தது. அணையின் நீர்திறப்பும், வரத்தும் இதே நிலையில் நீடித்தால் இந்த வார இறுதியில் இந்த ஆண்டில் மேட்டூர் அணை 3-வது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது என நீர்வளத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து