முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 இடங்களில் வரும் 11-ம் தேதி ஆயுர்வேத நிறுவனங்களை திறந்து வைக்கிறார் பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      இந்தியா
modi-2022-09-01 (2)

கோவா, காஸியாபாத், டெல்லி ஆகிய 3 இடங்களில் வரும் 11-ம் தேதி உள்ள ஆயுர்வேத நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். 

கோவா தலைநகர் பனாஜியில் வருகிற டிசம்பர் 11 ஆம் தேதி 9-வது உலக ஆயுர்வேத காங்கிரஸ் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருப்பதாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  அதுபோல, கோவாவில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் (AIIA), காஸியாபாத் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் (NIUM) மற்றும் டெல்லியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் (NIH) ஆகிய 3 நிறுவனங்களை டிசம்பர் 11 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.  அன்றைய தினம் வடக்கு கோவாவில் உருவாகி வரும் மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியையும் பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து