முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிலேயே முதல் முறையாக ஐதராபாத்தில் ஏ.டி.எம். மூலம் தங்கம் வாங்கலாம்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      வர்த்தகம்
ATM 2022 12-06

வழக்கமாக ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து எல்லோரும் அச்சடித்த கரன்சி நோட்டுகளைதான் எடுப்போம். இந்தச் சூழலில் ஏ.டி.எம். மூலம் தங்கம் வாங்கலாம் என தெரிவித்துள்ளது ஐதராபாத் நகரில் இயங்கி வரும் கோல்ட்சிக்கா நிறுவனம். நாட்டிலேயே முதல் முறையாக இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் தங்கத்தை அதிகம் நுகர்வு செய்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால், நம் நாட்டில் தங்கத்திற்கான டிமாண்ட் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு தங்க நுகர்வை 24x7 என்ற கணக்கில் எந்நேரமும் பெற இந்த கோல்டு ஏ.டி.எம். அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோல்டு ஏ.டி.எம். மூலம் தங்கம் வாங்குவது எப்படி? 

வழக்கமாக ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் அதே நடைமுறை தான் இதற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோல்ட் ஏ.டி.எம்.-ல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயனர்கள் பயன்படுத்த முடியுமாம். தங்க காசுகளை மட்டுமே இந்த கோல்டு ஏ.டி.எம். மூலம் பயனர்கள் பெறமுடியும். 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையில் தங்க காசுகள் இந்த ஏ.டி.எம்.-ல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்தமான அசல் 24 கேரட் தங்க காசுகளை இந்த கோல்டு ஏ.டி.எம். வழங்குமாம்.

இந்த ஏ.டி.எம். இப்போது ஐதராபாத் - பேகும்பேட் பிரகாஷ் நகர் மெட்ரோ நிலையம் அருகே நிறுவப்பட்டுள்ளதாம். பயனர்கள் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் தங்கத்தை இந்த கோல்டு ஏ.டி.எம். மூலம் வாங்கலாம் என கோல்ட்சிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து