முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய பிரேசில், குரோசியா அணிகள்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      விளையாட்டு
Brazil-Croatia-teams 2022

Source: provided

தோகா : உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதி சுற்றுக்கு பிரேசில், குரோசியா அணிகள் முன்னேறியுள்ளன.

ஆரம்பம் முதல்....

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார். இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு எளிதில் முன்னேறியது.

1-1 என சமனிலை... 

இரவு 8.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் ஜப்பான், குரோசியா அணிகள் மோதின. தொடக்கத்தில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் டெய்சன் மேடா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

இதனால் முதல் பாதியில் ஜப்பான் அணி 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 55-வது நிமிடத்தில் குரோசியாவின் இவான் பெரிசிக் ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என சமனிலை வகித்தன.

காலிறுதிக்கு தகுதி...

கூடுதலாக 10 நிமிடங்கள் என 3 முறை அளிக்கப்பட்டன. அப்போதும் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இறுதியில், குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து