முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு மேலும் ஆயுத உதவி: அமெரிக்கா வழங்கியது

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      உலகம்
America 2022 12 -09

உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவியை அமெரிக்கா வழங்கியது. 

உக்ரைன்  மீது ரஷ்யா தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷ்யா தன்வசப்படுத்தியுள்ளது. உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன. 

அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 19.3 பில்லியன் டாலர் மதிப்பிலான அதிகமான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து