முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. காப்பகத்தில் சுருக்கு கயிற்றில் தொங்கிய புலி: வனத்துறையினர் தீவிர விசாரணை

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      இந்தியா
Tiger 2022 12 -09

மத்தியப் பிரதேசம், விக்ரம்பூர் பன்னா புலிகள் காப்பகத்தின் ஒரு மரத்தில் 2 வயது ஆண் புலி ஒன்று, சுருக்குக் கயிற்றில் தொங்கி இறந்த நிலையில் இருந்துள்ளது. 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புலியின் இறப்புக்கான காரணத்தை அறிய வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து மோப்ப நாய்கள் மூலமாகச் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். விசாரணையில், கிராம மக்கள் வேறு ஏதேனும் விலங்குகளை வேட்டையாட அங்கே தூண்டில் சுருக்குக் கயிற்றை வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. 

இதுகுறித்து சத்தர்பூர் மலைத்தொடரின் வனப் பாதுகாவலர் சஞ்சீவ் ஜா கூறுகையில், அவ்வளவு உயர மரத்தில் புலி எப்படிச் சென்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, புலியின் உறுப்புகளின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனையும் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து