முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஒதுக்கிய இல்லத்தை காலி செய்தார் மெஹபூபா முப்தி

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      இந்தியா
Mehbooba Mufti 2022 12 -09

அனந்த்நாக் மாவட்டத்தில் அரசு ஒதுக்கிய இல்லத்தை ஜம்மு, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி காலி செய்துள்ளார். 

2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்தாகும் முன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கடைசி முதல்வராக பொறுப்பில் இருந்தவர் மெஹபூபா முப்தி. கடந்த சில தினங்களுக்கு முன்பாக 8 முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கிய அரசு இல்லங்களை காலி செய்ய அதிகாரிகளால் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

இதை தொடா்ந்து அனந்த்நாக் மாவட்டம் குப்கா் நகரில் தனக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை மெஹபூபா முப்தி காலி செய்துள்ளார்.  இது தொடா்பாக விளக்கமளித்துள்ளஅதிகாரிகள், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான மெஹபூபா முப்தி தனக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை காலி செய்தார். அனைத்து வாடகை பாக்கியையும் அவா் செலுத்தி விட்டார். அரசு இல்லத்தைக் காலி செய்து தன்னுடைய குடும்ப இல்லத்திற்கு அவா் திரும்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து