முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூரி ஜெகநாதர் கோவிலுக்கு ஜன.1 முதல் செல்போன் கொண்டு செல்ல தடை

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      ஆன்மிகம்
Puri-Jagannath 2022 12 -09

ஒடிசா மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலில் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. மேலும் சிலர் கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த போதிலும் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தது. இதனால் தமிழகத்தில் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. 

இந்த நிலையில் பிரசித்தி பெற்ற ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலிலும் செல்போன் கொண்டு செல்ல  தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம்( ஜனவரி) 1-ம் தேதி முதல் செல்போனுக்கு தடை விதிக்கப்படுவதாக ஜெகநாதர் கோவிலின் தலைமை நிர்வாகி வீர் விக்ரம் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து