முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மியின் அடுத்த இலக்கு மிசோரம் சட்டசபை தேர்தல்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      இந்தியா
AAP 2022 12 07

Source: provided

புது டெல்லி : மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 25 தொகுதிகளில் போட்டியிடும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டப்பேரவையின் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த நிலையில், மிசோரம் மாநில ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் ஆண்ட்ரூ லால்ரெம்கிமா, நிருபர்களிடம் கூறியதாவது, 

மிசோரமில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளோம். நாங்கள் நேர்மையான மற்றும் துணிச்சலான வேட்பாளர்களைத் தேடி வருகிறோம். ஆம் ஆத்மி கண்டிப்பாக மிசோரத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 25 தொகுதிகளிலாவது போட்டியிடும். டெல்லியில் உள்ள எங்களது கட்சித் தலைவர்கள் இந்த வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் எங்களது இந்த வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார். ஆம் ஆத்மி தொடங்கப்பட்டு வெறும் 10 ஆண்டுகளே ஆகிறது. குஜராத் தேர்தலில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியதன் மூலம் நாங்கள் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளோம். குஜராத்தினை போலவே மிசோரத்திலும் ஆம் ஆத்மி கால் பதிக்கும் என்று அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து