முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம் திறப்பிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2022      இந்தியா
Cong 2022 12 17

கர்நாடக சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.

கர்நாடக அரசுக்கு 2 இடங்களில் சட்டப்பேரவை உள்ளது. ஒன்று தலைநகர் பெங்களூருவில் இருக்கின்றது. மற்றொன்று மகாராஷ்ட்ராவை ஒட்டிய நகரான பெலகவியில் இருக்கின்றது. பெலகவி மாவட்டத்திற்கு மகாராஷ்ட்டிரா நீண்டகாலமாக உரிமை கோரி வருவதால், அதை முறியடிக்கும் நோக்கில் கடந்த 2012ல் பெலகவியில் சட்டப்பேரவை கட்டிடம் அமைக்கப்பட்டது.

கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளே அம்மாநில எதிர்க்கட்சிகள் அவைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கின. இதற்குக் காரணம், பெலகவி சட்டப்பேரவை வளாகத்தில் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களில் ஒருவரான வீர சாவர்க்கரின் படம் நேற்று திறக்கப்பட்டதுதான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை வளாகத்தின் முன்பாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமைய்யா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீர சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே அரசு இதை செய்திருக்கிறது. மாநில அரசு மீது நாங்கள் ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறோம். இதுபற்றி விவாதத்தை தவிர்க்கவே அரசு இவ்வாறு செயல்பட்டுள்ளது. இதை அரசின் முடிவுக்கு எதிரான போராட்டம் என நான் சொல்ல மாட்டேன். வீர சாவர்க்கரின் படத்தை திறந்த அரசு, அனைத்து தேசிய தலைவர்கள், சமூக சீர்திருத்தவாதிகளின் படங்களையும் திறக்க வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து