முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளர்கிறது: கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை டுவீட்

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2022      இந்தியா
Sundar-Pichai 2022 12 17

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளர்கிறது என்று கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். 

பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மிகச் சிறந்ததாக இருந்தது. சந்திப்புக்கு நன்றி. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சி மிக வேகமாக வளர்ந்து வருவதை பார்க்கிறேன். வருங்காலத்தில் இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியிலான நல்லுறவை எதிர்நோக்குகிறேன். வலிமையான நமது கூட்டு தொடர்வதை எதிர்பார்க்கிறேன். ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு தனது முழு ஆதரவு இருக்கும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து