முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7.2 சதவீத இந்தியர்களிடம் பாஸ்போர்ட் இருக்கிறதாம்: தமிழகத்தில் 97 லட்சம் பேரிடம் உள்ளது

திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2022      இந்தியா
Passport 2022 12 19

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 7.2 சதவீதம் பேரிடம் கடவுச்சீட்டு (பார்ஸ்போர்ட்) இருப்பதும், பெரும்பாலானோர் அதனை ஒருமுறையேனும் பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதன்படி, டிசம்பர் மாத மத்தியில், நாட்டில் வழங்கப்பட்ட ஒட்டுமொத்த பாஸ்போர்டுகளின் எண்ணிக்கை 9.6 கோடியாக உள்ளது. இது ஒரு சில மாதங்களில் 10 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புதிய தரவுகளின்படி, நாட்டில் ஒட்டுமொத்த கடவுச்சீட்டுகளில் 2.2 கோடி அல்லது 23 சதவீதம் பாஸ்போர்ட்டுகள் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தலா ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள். 

அதற்கடுத்த இடத்தில்தான் தமிழகம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், கர்நாடக மாநிலங்கள் அணிவகுத்துள்ளன. அதாவது தமிழகத்தில் 97 லட்சம் பேர் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள். மக்கள் தொகையில் தமிழகமும், மகாராஷ்டிரமும் முன்னிலையல் இருந்த போதும், குறைந்த மக்கள் தொகை கொண்ட கேரளம், இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. ஆனால் தமிழகத்தை விட இரண்டு மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்திலோ 87.9 லட்சம் பேர் தான் பாஸ்போர்ட் வைத்திருக்கிறார்கள். 

பாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகள் கடுமையாக இருந்த நிலையில், அண்மையில்தான் பல நடைமுறைகள் தளர்த்தப்பட்டு எளிதாக்கப்பட்டது. நாடு முழுக்க பாஸ்போர்ட் சேவை மையங்கள் அதிகரிப்பும் பாஸ்போர்ட் பெறுவதை எளிதாக்கியது. இதனால், 2015ஆம் ஆண்டில் ஒரு பாஸ்போர்ட் வழங்க 21 நாள்கள் ஆன நிலையில் தற்போத வெறும் 6 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து