முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு 4,244 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை பாக்கி: மத்திய நிதி அமைச்சர் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2022      இந்தியா
nirmala-sitharaman 2022 12

தமிழகத்திற்கு ரூ.4,244 கோடி அளவுக்குத்தான் ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை பாக்கி உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்குமாறு மாநிலங்களவையில் தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. 2020ல் இருந்து 2023 வரை தர வேண்டிய ரூ.10,879 கோடி ஜி.எஸ்.டி நிலுவை தொகையை வழங்க பி.வில்சன் வலியுறுத்தினார். உறுப்பினர் வில்சன் கேள்விக்குப் பதிலளித்த மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை ரூ.10,000 கோடி என்பதை ஏற்க மறுத்துவிட்டார்.

தமிழகத்திற்கு ரூ.4,244 கோடி அளவுக்குத்தான் ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை பாக்கி உள்ளதாக நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்தியது குறித்த சான்றை தமிழகம் வழங்கினால் தான் நிதியை விடுவிக்க முடியும். 2022 ஜூன் மாத அளவில் ஜி.எஸ்.டியால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட ரூ.1,200 கோடி மட்டுமே தர வேண்டி உள்ளது. தமிழ்நாடு நிதியை பயன்படுத்தியது தொடர்பான அறிக்கை 10 நாட்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது. நிதியை பயன்படுத்தியது தொடர்பான தமிழக அரசின் அறிக்கையை ஆய்வு செய்த பிறகே நிதி ஒதுக்கீடு பற்றி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து