முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளிர்கால தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்: பாராளுமன்றக் கூட்டத்தொடர் வரும் 23-ம் தேதியுடன் நிறைவு

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2022      இந்தியா
Parliament 2022 12-06

தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 23-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இதற்கான முடிவை பாராளுமன்ற அலுவலக பரிந்துரை குழு ஒருமனதாக எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாமதமாக தொடக்கம்...

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்கியது. கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 29-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

17 அமர்வுகளுக்கு...

முன்னதாக பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் 29-ம் தேதி வரை நடைபெறும் என்றும், மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும் என்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அறிவித்திருந்தார். எனினும், பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிவடைய இருக்கிறது.

முன்கூட்டியே நிறைவு...

இந்நிலையில் பாராளுமன்றக் கூட்டத் தொடர் தொடர்பாக, அலுவலக பரிந்துரை குழு நேற்று கூடி ஆலோசனை மேற்கொண்டது. இதில், வரும் 23-ம் தேதியோடு முன்கூட்டியே குளிர்காலக் கூட்டத் தொடரை முடித்துக்கொள்வது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு...

இந்திய - சீன ராணுவ வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல் விவகாரம், இந்த பாராளுமன்றக் கூட்டத் தொடரில் மிக முக்கிய விஷயமாக இருந்தது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு அவைகளிலும் விளக்கம் அளித்தார். எனினும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதனை அரசு ஏற்கவில்லை. இதனால், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து வெளிநடப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாமலேயே கூட்டத் தொடர் நிறைவடைய இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து