முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: பரிசோதனைகளை தீவிரப்படுத்தக்கோரி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2022      இந்தியா
India-corona-2022 12 20

Source: provided

புதுடெல்லி : ஜப்பான், அமெரிக்கா,சீனா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதையடுத்து பரிசோதனைகளை தீவிர படுத்துங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

இதற்கிடையே சீனாவில் அடுத்த 90 நாட்களில் 87 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்றும் பல லட்சம் பேர் செத்து மடிவார்கள் என்றும் அந்த நாட்டு தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரித்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீன மக்கள் போராட்டத்தில் குதித்ததால் அண்மையில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன. இதனால் கடந்த ஒன்றரை மாதமாக பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

அண்டை நாடான சீனா மற்றும் ஜப்பான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்., அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி ஒன்றை உள்ளார். அதில் ஜப்பான், அமெரிக்கா, சீனா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் பரிசோதனைக்காக மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை என தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து