முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம்: சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு

புதன்கிழமை, 21 டிசம்பர் 2022      இந்தியா
Parliment 2022 12 21

இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பங்கேற்றனர்.

இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே நிகழ்ந்த மோதல் குறித்தும், இந்திய எல்லையை சீனா ஆக்கிரமித்திருக்கிறதா என்பது குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவைத் தலைவரும் இதற்கு அனுமதி அளிக்க மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இதைக் கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பிக்கள், சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ப. சிதம்பரம், கே.சி. வேணுகோபால், திமுக எம்.பி. ஆ. ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய சோனியா காந்தி, "விவாதம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்பதில் அரசு பிடிவாதமாக உள்ளது. எல்லையில் உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பாராளுமன்றத்திற்கும் தெரியவில்லை; மக்களுக்கும் தெரியவில்லை. பொருளாதார ரீதியிலான பதிலடியை அரசு ஏன் சீனாவுக்குக் கொடுக்கவில்லை?" என கேள்வி எழுப்பினார்.

முன்னதாக மக்களவை நேற்று காலை 11 மணிக்குக் கூடியதும், இந்திய - சீன எல்லை விவகாரம் குறித்து விவாதித்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், கூடிய உடனேயே அவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து