முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் 45,000 கிராமங்களில் இதுவரை 4ஜி சேவை இல்லை

புதன்கிழமை, 21 டிசம்பர் 2022      வர்த்தகம்
4G 2022 12 21

நாட்டில் 45,000 கிராமங்களில் தற்போதுவரை 4ஜி சேவை வழங்கப்படவில்லை என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில், 4ஜி சேவை வழங்கப்படாத கிராமங்களின் எண்ணிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று பதிலளித்தது.

அதில், நாட்டில் இதுவரை 93 சதவிகிதம் கிராமங்கள் 4ஜி சேவைகளை பெற்றுள்ளன. மொத்தம் 45,000 கிராமங்களுக்கு இதுவரை 4ஜி சேவை வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக ஒடிஸாவில் 7,592 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து