முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்களை யார் விளையாட சொன்னது...? - இந்திய சீனியர் வீரர்கள் மீது கபில் கடும் தாக்கு

புதன்கிழமை, 21 டிசம்பர் 2022      விளையாட்டு
Kapil-Dev 2022 12 21

Source: provided

கொல்கத்தா : இந்திய அணியின் வீரர்களை கபில்தேவ் கடுமையாக விமர்சனம் செய்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீரர்கள் ஓய்வு...

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் தங்களுக்கு அழுத்தம் ஏற்படுவதாக கூறி சில தொடர்களில் பங்கேற்காமல் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். அதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் சில தொடர்களில் வீரர்களுக்கு ஓய்வு அளித்து வருகிறது. தற்போது கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு வழங்கி வருகிறது.

கடும் விமர்சனம்...

இந்த நிலையில் கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபில் தேவ், சீனியர் வீரர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். நாங்கள் ஐபிஎல் விளையாடுகிறோம், எங்களுக்கு அழுத்தம் நிறைய இருக்கிறது. இந்த வார்த்தை பொதுவானது சரியா?. அவர்களிடம் நான் விளையாடாதீர்கள் என்று சொல்வேன். யார் உங்களை விளையாட சொன்னார்கள்? அழுத்தம் உள்ளது. ஆனால் அந்த மாதிரியான அழுத்தம் தரக்கூடிய இடத்தில் நீங்கள் ஆடுகிறீர்கள்.

கற்றுக்கொள்ளுங்கள்...

இவ்வளவு அழுத்தத்துடன் நீங்கள் விளையாடினால் உங்களை சிலர் ரசிப்பார்கள், பலர் உங்களை திட்டுவார்கள். இதற்கெல்லாம் நீங்கள் பயந்தால் நீங்கள் விளையாடவே தேவையில்லை. நீங்கள் சொந்த நாட்டுக்காக ஆடும் போது நீங்கள் அழுத்தத்தை உணர்வீர்களா? அது எப்படி சாத்தியம்?. 100 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இருந்து 20 பேர் விளையாடுகிறீர்கள். இதில் உங்களுக்கு அழுத்தம் இல்லை மாறாக இதற்காக நீங்கள் பெருமை கொள்ள வேண்டும். மக்களிடம் இருந்து நீங்கள் அதிகப்படியான அன்பை பெறுகிறீர்கள். அந்தப் பெருமையை பெற கற்றுக்கொள்ளுங்கள்.

வாழைப்பழ கடை... 

அழுத்தம் என்பது அமெரிக்க வார்த்தை. நீங்கள் வேலை செய்ய விரும்பவில்லை என்றால், வேண்டாம். உங்களை யாரும் கட்டாயப்படுத்துகிறார்களா?. வாழைப்பழ கடை திறங்கள். முட்டைகளை விற்று பிழைத்துக் கொள்ளுங்கள். ஆனால், உங்களுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது, அதை ஏன் நீங்கள் அழுத்தமாக நினைக்கிறீர்கள். அதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்டு, சந்தோஷமாக ஆடுங்கள். நீங்கள் ஒரு வேலையை செய்ய தொடங்கும் நாளில் இருந்து அந்த வேலை எளிதாக தோன்றும். ஆனால் அதே விஷயத்தை நீங்கள் அழுத்தம் என்று நினைத்தால், அதில் நல்லது எதுவும் வராது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து