முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லுமா இந்திய அணி ?- 2-வது போட்டி இன்று தொடக்கம்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2022      விளையாட்டு
Indian-team 2022 12 21

Source: provided

மிர்பூர் : இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. 2 டெஸ்ட் தொடரில் சட்டோகிராமில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 188 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இன்று தொடக்கம்...

இந்தியா-வங்காளதேசம் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது. டிரா செய்தாலே தொடரை கைப்பற்றிவிடும். ஆனால் வெற்றியுடன் தொடரை முடிக்க இந்திய வீரர்கள் விரும்புகிறார்கள்.

ராகுல் கேப்டன்...

இந்த டெஸ்டிலும் கேப்டன் ரோகித் சர்மா ஆடவில்லை. கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை . முதல் டெஸ்டிலும் அவர் விளையாடவில்லை. லோகேஷ் ராகுல் 2-வது டெஸ்டிலும் கேப்டனாக பணியாற்றுவார். பேட்டிங் மட்டும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது. புஜாரா (192 ரன்), சுப்மன்கில் (130) ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் உள்ளனர். இருவரும் முதல் டெஸ்டில் சதம் அடித்து இருந்தனர்.

வங்கதேசத்திற்கு...

இது தவிர ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப்பண்ட் ஆகியோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். விராட் கோலி , ராகுல் இந்த டெஸ்டில் முத்திரை பதிப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ் முதல் டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். அக்‌ஷர் படேல், முகமது சிராஜ் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். சகீப்-அல்-ஹசன் தலைமையிலான வங்காள தேச அணி இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும். இதனால் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடுவார்கள்.

காலை தொடக்கம்...

இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் அந்த அணி உள்ளது. தொடக்க வீரர்கள் நஜிமுல் உசேன், ஜாகீர் ஹசன், கேப்டன் சகீப்-அல்-ஹசன், தய்ஜுல் இஸ்லாம், மெகிதி ஹசன் மிராஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளும் மோதிய 12 டெஸ்டில் இந்தியா 10-ல் வெற்றி பெற்றது. 2 டெஸ்ட் 'டிரா' ஆனது. இன்றைய டெஸ்ட் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து