முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உமேஷ், அஸ்வின் அபார பந்துவீச்சு: முதல் இன்னிங்சில் 227 ரன்களில் வங்காளதேச அணி 'ஆல் அவுட்'

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2022      விளையாட்டு
22-Ram-51-A

Source: provided

மிர்ப்பூர்: இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

வங்கதேசம் பேட்டிங்...

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டை 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் நேற்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளத்தில் புற்கள் நிறைய இருந்ததால் சிராஜ், உமேஷ் யாதவ், உனாட்கட் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்துள்ளது இந்திய அணி. இதனால் கடந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாகத் தேர்வான குல்தீப் யாதவ் இம்முறை நீக்கப்பட்டுள்ளார்.

உமேஷ் யாதவ்...

வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. பல வருடங்களுக்குப் பிறகு தனது 2-வது டெஸ்டை விளையாடும் உனாட்கட், முதல் டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார். ஜாகீர் ஹசனின் விக்கெட்டை உனாட்கட்டும் ஷான்டோ விக்கெட்டை அஸ்வினும் எடுத்தார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்திலேயே ஷகில் அல் ஹசன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 5 பவுண்டரிகள் அடித்த முஷ்ஃபிகுர் ரஹிம் 26 ரன்களில் உனாட்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் விரைவாக 25 ரன்கள் சேர்த்த லிட்டன் தாஸை அஸ்வின் வீழ்த்தினார்.

அஸ்வின் அபாரம்...

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளையின்போது 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. மொமினுல் ஹக் 65, மெஹிதி ஹசன் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு வீசப்பட்ட 29 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேசம்.  தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறினார்கள் வங்கதேச பேட்டர்கள். மெஹிதியை 15 ரன்களிலும் நுருல் ஹசனை 6 ரன்களிலும் ஆட்டமிழக்கச் செய்தார் உமேஷ் யாதவ். அடுத்து வந்த டஸ்கின் அஹமத்தை ஒரு ரன்னில் வெளியேற்றினார். கடைசி இரு விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார் அஸ்வின். இந்தியப் பந்துவீச்சைத் திறமையாக எதிர்கொண்ட மொமினுல் ஹக் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

227 ரன்களுக்கு...

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 73.5 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 5 விக்கெட்டுகளை 14 ரன்களுக்கு வீழ்த்தியது இந்தியா. உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளும் உனாட்கட் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். முதல் நாள் முடிவில் இந்திய அணி, 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 14, ராகுல் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள்.

BOX - 1

ஜெயதேவ் உனத்கட்....

31 வயதான உனத்கட் இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுக்க கடந்து வந்தது ஐபிஎல் போன்ற பூப்பாதை அல்ல. அது உள்ளூர் கிரிக்கெட் எனும் சிங்கப் பாதையை கடந்து வந்து கொடுக்கப்பட்ட கம்பேக். இந்திய அணியில் மிக இளம் வயதில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2010-ல் டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம், 2013-ல் ஒருநாள் மற்றும் 2016-ல் டி20 கிரிக்கெட் அறிமுகம் அவருக்கு அமைந்தது.

தற்போது வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்ற அவர், இந்த பார்மெட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இது 12 ஆண்டு கால காத்திருப்புக்கு கிடைத்த பலனாகும். வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் (இதுவரை) 16 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து