முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் வரலாற்றில் சாதனை: சாம் கரணை ரூ.18.50 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2022      விளையாட்டு
Punjab-team 2022 12 23

Source: provided

கொச்சி : கொச்சியில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். மினி ஏலத்தில் சாம் கரணை ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

பென் ஸ்டோக்ஸ்....

கொச்சி நகரில் நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வேகப்பந்து வீச்சு வெளிநாட்டு ஆல் ரவுண்டரை வாங்க வேண்டிய அவசியம் இருந்தது. ஏனெனில் சென்னை அணியில் இப்போது பிராவோ இல்லை. அதனைக் கருத்தில் கொண்டு சாம் கரனை வாங்க முயன்று பார்த்தது. ஆனால், அவருக்கான விலை அதிகரித்துக் கொண்டே சென்றதால் அதை ஒரு கட்டத்தில் தவிர்த்து விட்டது. பின்னர் பென் ஸ்டோக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது கோதாவில் இறங்கி அவரை வாங்கியது சென்னை அணி நிர்வாகம்.

சிறந்த எக்கானமிக்....

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி பாணியில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி வரும் ஆல் ரவுண்டர். நெருக்கடியான போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர். அதற்கு உதாரணமாக 2019 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை சொல்லலாம். இரண்டிலும் டாப் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். சிறந்த ஸ்ட்ரைக் ரேட் மற்றும் பவுலிங் எக்கானமி கொண்டுள்ளார்.

பலம் சேர்க்கும்...

மொத்தம் 43 ஐபிஎல் போட்டிகளில் அவர் இதுவரை விளையாடி உள்ளார். அதன் மூலம் 920 ரன்களும், 28 விக்கெட்டுகளும், 21 கேட்சுகளும் பிடித்துள்ளார். சென்னை அணிக்கு அவரது வருகை நிச்சயம் பலம் சேர்க்கும் என சொல்லப்படுகிறது. சென்னை ரசிகர்களும் விசில் போட்டு அவரை வரவேற்று வருகின்றனர். இவர் கேப்டன்சி திறனும் கொண்டவர் என்பதை சென்னை அணி கருத்தில் கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது.

சாம் கரன் சாதனை...

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கரன் பெயர் அறிவிக்கப்பட்டது முதலே மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான், சென்னை மற்றும் பஞ்சாப் என ஐந்து அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டின. இறுதியில் 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி அவரை வாங்கியது. அவரின் அடிப்படை விலை 2 கோடி ரூபாய். இதன்மூலம் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் ஆகியுள்ளார் சாம் கரன்.

சென்னை அணிக்கு...

இடது கை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர். முக்கியமாக ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே கடத்துவதில் வல்லவர். அற்புதமான பவுலர். அண்மையில் டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அதன் மூலம் மொத்தம் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 32 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

ஜேசன் ஹோல்டர்...

ஓடியன் ஸ்மித்தை குஜராத் அணியும், சிக்கந்தர் ராசாவை பஞ்சாப் அணியும் இருவரும் அவர்களது அடிப்படை விலையான 50 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டனர். ஜேசன் ஹோல்டரை ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் வாங்க ஆர்வம் காட்டின. இறுதியில் 5.75 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி அவரை வாங்கியது.

கேமரூன் க்ரீன்....

அதன்பின்னர் கேமரூன் க்ரீன் பெயர் அறிவிக்கப்பட்டது. 23 வயதான ஆஸ்திரேலிய நாட்டு வீரர். ஏலத்தில் இவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. பேட்டிங் மற்றும் பவுலிங் என சகலத்திலும் கலக்கும் தரமான ஆல் ரவுண்டர். இந்தியாவில் கடந்த செப்டம்பரில் நடைபெற்ற டி20 தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 173.75. இவரை ஏலத்தில் வாங்க மும்பை மற்றும் பெங்களூரு அணிகளிடையே போட்டி நிலவியது. இறுதியில் 17.50 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஏலத்தின் முக்கிய அம்சங்கள் 

1) கேன் வில்லியம்சன் - ரூ.2 கோடி( குஜராத் ).

2) ஹேரி புரூக் - ரூ.13.25 கோடி (ஹைதராபாத் ).

3) மயங்க் அகர்வால் - ரூ.8.25 கோடி (ஹைதராபாத்).

4) ஜோ ரூட் - (எந்த அணியும் எடுக்கவில்லை).

5) அஜின்கியா ரகானே - ரூ.50-லட்சம் (சென்னை).

6) ரைலி ரூசோ - (எந்த அணியும் எடுக்கவில்லை).

7) சாம் கரண் - ரூ.18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்).

8) ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி (ராஜஸ்தான்)

9) கேமரூன் கிரீன் - ரூ.17.50 கோடி (மும்பை).

10) பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி (சென்னை).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து