முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். மினி ஏலம்: 2 வீரர்களை ரூ. 21.50 கோடிக்கு வாங்கிய சன்ரைசரஸ் ஐதராபாத்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2022      விளையாட்டு
IPL 2022 12 23

Source: provided

கொச்சி : ஐ.பி.எல். மினி ஏலத்தில் ரூ.21.50 கோடிக்கு 2 வீரர்களை வாங்கியது ஐதராபாத் அணி.

405 வீரர்கள்...

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி பூருக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. இதேபோல் இந்திய வீரர் மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கி உள்ளது.

கேன் வில்லியம்சன்...

கேன் வில்லியம்சனை குஜராத் டைட்டன்ஸ் வாங்கி உள்ளது. அவரை அடிப்படை விலையான 2 கோடிக்கு குஜராத் அணி வாங்கியிருக்கிறது. அஜிங்கியா ரகானேவை ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருக்கிறது. அடிப்படை விலை 2 கோடி என நிர்ணயிக்கப்பட்ட ஜோ ரூட்டை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை மட்டும் தான் இந்த ஏலத்தில் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து