முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறக்க முடியுமா டோனி அறிமுகமான நாளை..?

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2022      விளையாட்டு
Tony 2022 12 23

Source: provided

18 ஆண்டுகளுக்கு முன்னர் டிச. 23-ம் தேதி தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் மகேந்திர சிங் டோனி எனும் மகத்தான வீரர். காலச்சக்கரத்தை அப்படியே பின்னோக்கி இதே நாளில் கடந்த 2004-க்கு சுழற்றினால் வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் உள்ள எம்ஏ அஜீஸ் மைதானத்தில் தனது சர்வதேச என்ட்ரியை கொடுத்தார் டோனி. முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஒரே பந்தில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவர் விளையாடிய முதல் நான்கு ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார். அப்போது அவருக்கு வயதும் 23 தான்.

பின்னர் 2005 ஏப்ரலில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசி தான் யார் என்பதை நிரூபித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அதே ஆண்டில் இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் விளாசினார். அதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவதரித்தார். 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை திறம்பட வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார். அப்படியே 2011 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் ஆனது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்றார். அதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களிலும் வென்ற கேப்டன் என்ற புகழை பெற்றார்.

________________

சென்னை அணியின் கேப்டனாக இங்கி., வீரர் பென் ஸ்டோக்ஸா?

ஐபிஎல் 2023 வீரர்களுக்கான ஏலத்தில் பிரபல வீரர் பென் ஸ்டோக்ஸைத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது. இதனால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக் கூடிய ஒரு வீரர் சிஎஸ்கேவுக்குக் கிடைத்துள்ளார்.

மேலும் டோனிக்கு அடுத்ததாக சிஎஸ்கேவின் கேப்டனாகவும் ஸ்டோக்ஸைக் கருதலாம் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக உள்ள பென் ஸ்டோக்ஸ், 2024 முதல் சிஎஸ்கேவின் கேப்டனாகச் செயல்படவும் வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணி, அடுத்த கேப்டனை இந்த ஏலத்தில் தேர்வு செய்துள்ளதாகவே சிஎஸ்கே ரசிகர்கள் எண்ணுகிறார்கள். ரசிகர்களின் கனவு பலிக்குமா?

________________

தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம்

2004-ம் ஆண்டுக்கு முன்பு ஓய்வுபெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிமுகப்படுத்தி உள்ளது. 10 முதல் 20 ரஞ்சி போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும், 1 முதல் 9 ரஞ்சி போட்டிகளில் ஆடிய வீரர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரமும் ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மூலம் மாதம் தோறும் நிதி பெற முடியாத தமிழக வீரர்களுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது. தகுதியுள்ள வீரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஐ.பழனி அறிவித்துள்ளார்.

________________

ரூ. 90 லட்சத்திற்கு தமிழக வீரர் ஜெகதீசனை வாங்கிய கொல்கத்தா 

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடைபெற்றது. முன்னணி வீரர்களை வாங்குவதற்கு அணிகள் இடையே கடும் போட்டி இருந்தது. தமிழக வீரர் ஜெகதீசனை, ரூ.90 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதேபோல இந்திய வீரர் நிஷாந்த் சிந்துவை சென்னை அணி ரூ.60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்திய வீரர்கள் சன்வீர் சிங்கை ஐதராபாத் அணி ரூ.20 லட்சத்திற்கும், ஷேக் ரஷீத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கும், விவ்ராந்த் சர்மாவை, ஐதராபாத் அணி ரூ.2.6 கோடிக்கும், இந்திய இளம் வீரர் உபேந்திர யாதவை, ஐதராபாத் அணி ரூ.25 லட்சத்துக்கும் ஏலத்தில் எடுத்தன. இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ.1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி.

________________

முகேஷ் குமாரை,ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் மேற்கு வங்க வீரர் முகேஷ் குமாரை,ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து