முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2022      விளையாட்டு
Australia 2022-12-25

Source: provided

மெல்போர்ன் : டீன் எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 

இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த நிலையில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்றும் அழைக்கப்படுகிறது. 

'பாக்சிங் டே' என்றால் ஒருவருக்கொருவர் சண்டையிடும் நாள் என்றும் அர்த்தம் கிடையாது. இதன் பின்னணியில் சில ருசிகர வரலாறு உண்டு. அதன் விவரம் வருமாறு:- 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். மறுநாள் அதாவது டிசம்பர் 26-ந்தேதி அன்று பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் நாளை ' பாக்சிங் டே' என்று அழைக்கிறார்கள்.

ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித்தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது, அவர்களின் முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்கும் பழக்கம் இருந்தது. அதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. முந்தைய காலத்தில் காற்றால் இயக்கப்படும் கப்பல்களில் மேற்கொள்ளப்படும் பயணம் எந்த ஆபத்தும் இன்றி பாதுகாப்பாக அமைய வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பணம் அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். பயணம் நிறைவு பெற்றதும் அந்த பணம் பாதிரியாரிடம் ஒப்படைக்கப்படும். கிறிஸ்துமஸ் அன்று அது திறக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும். இதுவும் 'பாக்சிங் டே' பெயருக்கு ஒரு அச்சாரமாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை ஆஸ்திரேலிய அணி அறிவித்துள்ளது. அதன் விவிரம் வருமாறு:- டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலந்து.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து