முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் சேர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2022      விளையாட்டு
Pak 2022-12-25

Source: provided

கராச்சி : பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் பறிகொடுத்தது. இந்த தோல்வியை அடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீது பல்வேறு விமர்சனங்கள் விழுந்தது. 

இந்நிலையில், அதிர்ச்சி அளிக்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவும் பாகிஸ்தான் மண்ணில் தான் நடைபெறுகிறது. 

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததை சரிசெய்யும் வகையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கட்டாயம் கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. 

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்:- 

பாபர் ஆசம் (கேப்டன்), அப்துல்லா ஷபீக், அபார் அகமது, ஹசன் அலி, இமாம் உல் ஹக், கம்ரான் குலாம், மிர் ஹம்சா, முகமது நவாஸ், முமகது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, நோமன் அலி, சஜித் கான், சல்மான் அலி ஆகா, சர்பராஸ் அகமது, சவுத் சகீல், ஷாநாவாஸ் தஹானி, ஷான் மசூத், ஜாகித் மெஹ்மூத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து