முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

42 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் ஒரு சவரன் விலை

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2023      வர்த்தகம்
Gold 2022-12-31

சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று 42 ஆயிரத்தைத் தாண்டி விற்பனையானது.

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. டிச.31-ம் தேதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,260 ஆக விற்பனையானது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,080 ஆக விற்பனையானது. அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.74.90 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.74,900 ஆக விற்பனையானது. தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்துவரும் நிலையில் நகைப்பிரியர்களுக்கும், பெண்களை பெற்றவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து