முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க மருத்துவமனையில் பிரேசில் முன்னாள் அதிபர் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2023      உலகம்
Brazil 2023-01-10

Source: provided

வாஷிங்டன் : பிரேசில் முன்னாள் அதிபர் ஜெர் போல்சனாரோ அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரேசில் நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் ஜெர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்று கொண்டார். 

வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்த நிலையில் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் பிரேசில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். 

அதே போல், ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிஸ்-க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போல்சனேரோ ஆதரவாளர்கள் நாடாளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு, ஜனாதிபதி மாளிகை முன் திரண்டதால் பிரேசிலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், முன்னாள் அதிபர் போல்சனேரோ உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஒர்லெண்டோ மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் போல்சனேரோ நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். 

வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சினை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போல்சனேரோவில் உடல்நிலை தற்போது சீராக உள்ள நிலையில் அவரை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து