முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்து இளவரசிக்கு சுயநினைவு திரும்பவில்லை : மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2023      உலகம்
Thailand 2023-01-10

Source: provided

பாங்காங்க் : ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 3 வாரங்கள் ஆகியும் தாய்லாந்து இளவரசிக்கு சுயநினைவு திரும்பவில்லை. இதையடுத்து அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

 தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா. 44 வயதான இவர் கடந்த மாதம் 15-ம் தேதி தலைநகர் பாங்காக்கில் தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்தார். 

உடனடியாக அவர் பாங்காக்கில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பஜ்ரகித்தியபா இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இளவரசியின் உடல் நிலை குறித்து அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அதில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு 3 வாரங்களாகியும் சுயநினைவு திரும்பவில்லை என்றும், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஆதரிக்கும் உபகரணங்களை பயன்படுத்தி டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து