முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால் மாற்றம் ஏதும் நிகழாது: ரஷ்யா கருத்து

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2023      உலகம்
Putin 2022 12 05

Source: provided

 மாஸ்கோ : மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி வழங்கி வருவதால் உக்ரைன் மக்களின் துன்பம் மட்டுமே நீடிக்கும் என்றும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது என்றும் ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.

உக்ரைன்  மீதான ரஷ்யாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த சூழலும் தென்படவில்லை. மாறாக இருதரப்பும் நாளுக்குநாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. 

உக்ரைன் ரஷியாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகிறது. 

இந்த நிலையில், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கி வருவதால் உக்ரைன் மக்களின் துன்பம் மட்டுமே நீடிக்கும். உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது என ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து