முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரிய மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது சீனா

புதன்கிழமை, 11 ஜனவரி 2023      உலகம்
China 2023-01-11

Source: provided

பெய்ஜிங் : தென்கொரிய மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது. 

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அந்த நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா, அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கட்டாய கொரோனா பரிசோதனை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, சில நாடுகள் சீன பயணிகளை மட்டும் குறிவைத்து கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. 

இந்த நிலையில் சீன பயணிகளுக்கு தென்கொரியா கட்டுப்பாடுகளை விதித்ததற்கு பதிலடியாக தென்கொரிய மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைப்பதாக சீனா அறிவித்துள்ளது. இது குறித்து தென்கொரியாவில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தென்கொரியா சீன பயணிகள் மீதான பாரபட்சமான நடவடிக்கைகளை நீக்கும் வரை அந்த நாட்டில் இருந்து சீனாவுக்கு சுற்றுலா மற்றும் வணிகத்துக்காக வருபவர்களுக்குரிய விசா நிறுத்தி வைக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து