முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் 42 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2023      வர்த்தகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. 

தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டு வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. டிச.31ஆம் தேதி ஒரு சவரன் ரூ.41,040 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி 9-ம் தேதி 42 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், நேற்று மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. 

இந்நிலையில், ஜன.13ஆம் தேதியான நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,250 ஆக விற்பனையானது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ஒரு சவரன் ரூ.42,000 ஆக விற்பனையானது.அதேசமயம், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.74.00 ஆகவும், ஒரு கிலோ ரூ.74,000 ஆக விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து