முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மேலும் ஒரு மாகாண பேரவை கலைப்பு

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2023      உலகம்
Imran-Khan 2023 01 19

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் கைபா்-பாக்துன்கவா மாகாணத்தின் பேரவையை ஆளுநா் குலாம் அலி கலைத்துள்ளார். 

ஏற்கெனவே அந்தக் கட்சி ஆட்சி நடைபெற்று வந்த பஞ்சாப் மாகாணப் பேரவையும் கலைக்கப்பட்ட நிலையில், இரண்டாவதாக கைபா்-பாக்துன்கவா பேரவையும் கலைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் சதி திட்டத்தால் மத்தியில் தனது அரசு கவிழ்க்கப்பட்டதாக குற்றம் சாட்டி வரும் இம்ரான்கான், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தோ்தல் நடத்த வலியுறுத்தி வருகிறார். அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக, அவரது கட்சி ஆட்சி நடைபெற்று வந்த மகாணப் பேரவைகள் கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து