முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

வியாழக்கிழமை, 19 ஜனவரி 2023      சினிமா      தமிழகம்
Vadivelu 2023 01 19

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று முன்தினம் இரவு உடல்நல குறைவால் காலமானார். இது குறித்து வடிவேல் கூறும் போது, தாய் சரோஜினி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நிலை குறைவு காரணமாக திடீரென காலமானதாக தெரிவித்துள்ளார். 

நடிகர் வடிவேலு தாய் மறைவிற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

நடிகர் வடிவேலுவின்  அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். 

ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். வைகைப் புயல் வடிவேலுவிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து