முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டிலேயே முதல்முறையாக கேரள உயர் கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுமுறை கட்டாயம்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2023      இந்தியா
Pranai-Vijayan 2023 01 20

நாட்டிலேயே முதல்முறையாக உயர்கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அன்றைய நாள்களில் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதை உணர்ந்து விடுமுறையை வழங்க வேண்டும் எனும் குரல் பரவலாக எழுந்து வருகிறது. அந்த குரலுக்கு வலுசேர்க்கும் விதமாக நாட்டிலேயெ முதன்முதலாக மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதுதொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேரள கல்வி நிலையங்களில் மாணவிகளின் வருகைப் பதிவு 73 சதவிகிதத்திற்கும் குறைவாக இருப்பதால் கட்டாய வருகைப் பதிவான 75 சதவிகித்தை பூர்த்தி செய்யமுடியாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் மாணவிகள் விடுமுறை எடுப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மாநில அரசு இத்தகைய தினங்களில் மாணவிகளின் நலன்கருதி கட்டாய விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே கொச்சின் பல்கலைக்கழகத்தில் இந்த அறிவிப்பு நடைமுறையில் உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் பிந்து தற்போது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.  நாட்டிலேயே முதல்முறையாக கேரள உயர்கல்வி நிலையங்களில் மாதவிடாய் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து