முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023      சினிமா
Santhanam 2023 01 23

Source: provided

சந்தானம் நடிக்கும் அடுத்த படம் வடக்குப்பட்டி ராமசாமி. தெலுங்குத் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் மூன்றாவது தயாரிப்பான இப்படத்தை டிக்கிலோனா  பட இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கவுள்ளார். இது குறித்து, பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் வி.ஸ்ரீ நட்ராஜ் கூறும்போது,  சந்தானம் எந்தவொரு ஜானர் கதைக்கும் பொருந்திப் போகக் கூடியவர். அவருடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருந்தோம். அப்போது தற்செயலாக நாங்கள் 'டிக்கிலோனா' படம் பார்த்துவிட்டு இயக்குநர் கார்த்திக் யோகியை சந்தித்தபோது அவர் ஒரு அற்புதமான கதையை எங்களுக்கு சொன்னார். 'வடக்குப்பட்டி ராமசாமி' பன்முக நடிகர் கவுண்டமணி சாரின் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று. இப்போதுள்ள தலைமுறை இளைஞர்களிடம் அனைத்து சமூகவலைதளங்களிலும் இந்த கதாபாத்திரம் மீம் மெட்டிரியலாக உள்ளது என்றார். வடக்குப்பட்டி ராமசாமி' ஒரு பீரியட் காமெடி-ட்ராமா படமாக அமைந்து அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடித்த ஒன்றாக அமையும் என உறுதியாக நம்புகிறோம்" என்றார். நடிகர் தமிழ் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். மேலும், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் படத்தில் நடிக்க உள்ளனர். இதனிடையே, நேற்று இந்த படத்தின் பூஜை எளிமையாக நடை பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து