முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேதாஜியின் 126-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023      இந்தியா
Modi-1 2023 01 23

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 126-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாள் நேற்று (திங்கள்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தலைவர்கள் பலரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிற்கு மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நேதாஜியின் பிறந்தநாளை பராக்ரம் திவாஸ் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். இந்திய வரலாற்றில் அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பை நினைவு கூறுகிறேன். 

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய போராளியாக இருந்த அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். அவரது எண்ணங்களால் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய அவரின் கனவுகளை நனவாக்க நாங்கள் உழைக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். 

அமித் ஷா: 

உள்துறை அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில், "தன்னுடைய தனித்துவமான தலைமைப் பண்புகளால் மக்களை ஒன்றிணைத்து, இந்திய சுதந்திரத்திற்காக 'ஆஸாத் ஹிந்த் ஃபவுஜ்' என்ற அமைப்பை உருவாக்கினார். அவரது 126-வது பிறந்த நாளில் நாடே நேதாஜியை நினைவுகூர்ந்து அவரது தைரியத்திற்கும், போராட்டத்திற்கும் தலைவணங்குகிறது. அனைவருக்கும் எனது பராக்ரம நாள் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி:

காங்கிரஸ் முக்கியத் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், "மகத்தான விடுதலைப்போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்கு எனது பணிவான அஞ்சலிகள். அவரது தைரியம் மற்றும் போராட்ட குணம், நமது நாட்டின் சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்க இன்றும் இந்தியர்களை தூண்டிக் கொண்டிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே: 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டர் பதிவில், "இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும், ஆசாத் ஹிந்த் ஃபவுஜின் நிறுவனரும், எங்களின் அடையாளமுமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126-வது பிறந்தநாளில் அவருக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் "ஜெய் ஹிந்த்", "உங்கள் உதிரத்தைக் கொடுங்கள்... நான் சுதந்திரத்தைக் கொடுக்கிறேன்" என்ற அவரது முழக்கங்கள் எல்லோருடைய மனதிலும் தாய்நாட்டின் மீதான உண்மையான பற்றினை தூண்டின" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து