முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் 8.5 லட்சம் பேர் எழுதும் ஜே.இ.இ., நுழைவு தேர்வு இன்று தொடக்கம்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023      தமிழகம்
JEE 2023 01 21

ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வு இன்று தொடங்க உள்ளது. நாடு முழுவதும், 8.5 லட்சம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர். இத்தேர்வு நடக்கும் நாட்களில், சில சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிளஸ் 2 செய்முறை தேர்வு நடப்பதால், அவற்றை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இன்ஜினியரிங்கில் படிக்க, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதன்படி, அடுத்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ, மெயின் நுழைவு தேர்வு, இரண்டு முறை நடத்தப்படுகிறது.

அதில், முதற்கட்ட தேர்வு இன்று துவங்க உள்ளது. இன்று முதல், 31ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க 8. 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இரண்டாம் கட்ட ஜே.இ.இ., தேர்வு ஏப்ரலில் நடக்கிறது. முதற்கட்ட தேர்வில் பங்கேற்றவர்களும், பங்கேற்காதவர்களும், இரண்டாம் கட்டத்திலும் பங்கேற்க முடியும்.

இதற்கிடையில், ஜே.இ.இ., நுழைவு தேர்வு நடக்கும் நாட்களில், சில சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் செய்முறை தேர்வுகளுக்கும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதனால், ஜே.இ.இ., எழுதச் செல்லும் மாணவர்கள், செய்முறை தேர்வை என்ன செய்வது என, தவிக்கும் நிலை உள்ளது. சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்ச்சிக்கு, மொத்த மதிப்பெண்ணில், செய்முறை தேர்வு மதிப்பெண்ணும் கட்டாயம் என்பதால், அந்த தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது அவசியம். எனவே, ஜே.இ.இ., மெயின் தேர்வு நாட்களில் செய்முறை தேர்வுகளை நடத்தாமல், வேறு நாட்களுக்கு மாற்றும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

இன்று தொடங்கவிருக்கும் ஜேஇஇ முதல்நிலைத் தேர்வெழுத 8.6 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இது 2022ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விடவும் 6,000 குறைவாகும். வழக்கம் போல ஜேஇஇ தேர்வில் மாணவர்களே அதிகளவில் விண்ணப்பித்திருக்கிறார்கள். அதாவது 6 லட்சம் பேர் (70 சதவீதம்) மாணவர்கள். முதல் முறையாக, 30 சதவீதத்துக்கும் மேல் மாணவிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இது கடந்த 2022ஆம் ஆண்டு 2.5 லட்சமாக இருந்து தற்போது 2.6 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து