முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023      விளையாட்டு
Indian-team 2023 01 23

Source: provided

மும்பை : இலங்கைக்கு எதிரான மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

4 ஆட்டங்களில்...

தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எளிதாக வீழ்த்திய இந்திய அணி, 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை 122 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 3-வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஆனால் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இந்தியா வெற்றி...

தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது இந்திய யு-19 மகளிர் அணி. முதலில் பேட்டிங் இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் மட்டும் எடுத்தது. பர்ஷவி சோப்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 7.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து பெரிய வெற்றியை அடைந்தது. ஷஃபாலி 15 ரன்களுக்கும் ரிச்சா கோஷ் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து